இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை நேற்று திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2015 (சனிக்கிழமை)
இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை பின்னவலையில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் உல்லாசப் பிரயாணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யானைகள் சரணாலயத்திற்கு அண்மித்து அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை கண்டு ரசிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விலங்கினங்களின் அன்றாட நடவடிக்கைகளையும் உல்லாசப் பிரயாணிகள் அவதானிக்க முடியும்.
இந்த திறந்தவெளி மிருகக்காட்சிசாலை 862 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான 488 மில்லியன் ரூபா திறைசேரி மூலம் வழங்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.