இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு (Indian Coast Guard) சொந்தமான 74.10 மீட்டர் நீளமுடைய இவ்ஆழ்கடல் ரோந்து படகு இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு செப்டம்பர் மாதம் வைபவரீதியாக பரிசளிக்கப்பட்டது.
இலங்கையின் கடலோர பாதுகாப்பு படை கப்பல் சுரக்ஸாவினுள் 14 அதிகாரிகள் மற்றும் 86 சிப்பாய்கள் பயணிக்க முடியும். குறித்த இக்கப்பல் 1,160 தொன் எடைகளுடன் மணித்தியாலத்திற்கு 22 கடல்மைல்கள் வேகத்தில் பயணிக்ககூடிய ஆற்றல் பெற்றது. மேலும், 8,500 கடல் மைல்கள் பயண எல்லையை கொண்டுள்ள இக்கப்பல் சாதாரண சஞ்சரிப்பு நேரத்தில் மணித்தியாலத்திற்கு 16 கடல்மைல்கள் வேகத்தில் பயணிக்ககூடியது.
இக்கப்பல் மூலம் இலங்கையின் கடல் எல்லையில் ரோந்து நடவடிக்கைகள், தேடுதல், மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண செயற்பாடுகள் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். அத்துடன் இக்கப்பல் பயிற்சி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முதலாவது ஆழ்கடல் ரோந்து கப்பல் சுரக்ஸா
— Valvettithurai.Org (@Valvettiturai) October 25, 2017
First Srilanka #costguard's offshore patrol #vessel commissionedhttps://t.co/DMCcUeJDI7 pic.twitter.com/WQpM8aiuun