மீன் பிடி படகுகள் மற்றும் வள்ளங்களை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கக் கூடிய நங்கூரத் தளம் ஒன்று (Fishing boats Anchorage) வல்வெட்டித்துறை ஆதிகோவில் பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
கடற்றொழில் மீன் பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சினால் (Ministry of Fisheries and Aquatic Resources Development) ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian development bank) நிதி ஒதுக்கீட்டில் பல கோடி ரூபா செலவில் இது அமையவுள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் பயன் அடையவுள்ளார்கள்.
பொலிகண்டியில் இதே போன்றதொரு நங்கூரத் தள கட்டுமானம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு துரித்த கதியில் இடம்பெற்று தற்பொழுது பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கீழே படத்தில் மாரி காலத்தில் நங்கூரப் பகுதி அற்ற வல்வை கடல் பகுதி
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.