கடந்த சில தினங்கள் முன்பு வட பகுதியில் ஏற்பட்ட கனமழை காரணமாக வல்வையிலும் பலத்த வெள்ளம் ஏற்பட்டிருந்தது. தொடர் மழை காரணமாக வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில், வல்வெட்டித்துறை பிரதேச வைத்திய சாலைக்குப் பின்னால் அமைந்துள்ள வீதியிலும் வெள்ளம் பாய்ந்தோடியது.
வெள்ளம் குறித்த வீதியிலிருந்து வைத்திய சாலையை ஒட்டி அமைந்துள்ள சிறிய ஒழுங்கை மற்றும் தெணி வைரவர் வழியாக, வல்வை மகளிர் மகா வித்தியாலயம் வழியாக வல்வெட்டித்துறை - பருத்தித்துறை வீதி வழியின் கீழாக அமைந்துள்ள மதகு வழியாகக் கடலில் கலப்பது வழமையாகும்.
அனாலும் இதற்கும் மேலால், கடந்த 17 ஆம் திகதி இரவு 10 மணிக்கு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் உள்ள பிற்பக்க சுவரில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் துளையிடப்பட்டு வெள்ளம் வைத்தியசாலைக்குள் பாய்ந்தோட விடப்பட்டதுள்ளது.
இதனால் கீழே படத்தில் உள்ள பிற்பக்க வளாகம் வெள்ளத்தால் நிரம்பி, வெள்ளம் தற்பொழுது புதிதாக திறந்த Thangamma maternity ward, வைத்தியசாலை சமையல் அறைக்குள் என்றவாறு சென்றுள்ளது. மேலும் வைத்தியரின் விடுதிக்கு செல்லமுடியாதவாறு வெள்ளம் நின்றிருந்தது.
குழந்தை பிறந்தது
அத்துடன் மேலும் குறிப்பிடக் கூடிய வகையில், அன்று இரவு ஒரு தாய்க்கு குழந்தை பிறந்ததாகவும், பிரசவ விடுதி வெள்ளம் காரணமாக, வைத்தியசாலையின் உயர்வான பிறதொரு இடத்தில் வைத்தே பிரசவம் பார்த்ததாகவும், பிரசவத்திற்குத் தேவையான உபகரணங்களை மழை மற்றும் வெள்ளத்தில் மத்தியில் பிரசவம் நடைபெற்ற இடத்திற்கு மாற்றியதாகவும் வைத்தியசாலையின் DMO Dr. கலைச்செல்வி நாம் வினாவியபோது எம்மிடம் கூறினார்.
சுவரில் துளையிட்ட சம்பவம் கடந்த வருடமும் இடம்பெற்றதாக அறிய முடிகின்றது.
சுவரில் போடப்பட்ட துளை - மண் மூடை கொண்டு அடைக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.