முன்னாள் போராளியும், எழுத்தாளருமான கம்பிகளின் மொழி பிரேம் அகால மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2024 (சனிக்கிழமை)
முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும், எழுத்தாளருமான கம்பிகளின் மொழி பிரேம் (பிரேம் குமார்) இன்று அகால மரணமானார். மன்னாரை பிறப்பிடமாகவும், வல்வை மற்றும் மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இவர், இன்று அதி காலை மன்னார் அடம்பனில் தனது வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்தபொழுது, வீதியில் வந்து கொண்டிருந்த வாகனம் ஒன்று மோதியதில் உயிர் இழந்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் எழுதிய முதலாவது நூலான ''கம்பிகளின் மொழி'" வல்வையில் சிறப்பாக வெளியிடப்பட்டது.
இறுதியாக ''குமரிக்கண்டம் முதல் முள்ளிவாய்க்கால் வரை " என்னும் நூலை அண்மையில் எழுதி முடித்துள்ளார், ஆனாலும் குறித்த நூல் வெளியீடு இன்னும் இடம்பெறவில்லை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு போரில் இவர் ஒரு கையை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar Periyathamby (Canada)
Posted Date: July 08, 2024 at 19:20
மிகுந்த வேதனை
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.