மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு யாழ் பல்கலைகழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
யாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு 3.30 மணிக்கு சென்ற துணைவேந்தர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உறுதிமொழி வழங்கினார்.
இதன் பின்னர் இன்று காலை ஏழு மணிக்கு நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. துணைவேந்தர் இந்த அடிக்கல்லை நாட்டிவைத்தார் . இதில் மாணவர்களும் கலந்துகொண்டனர். (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.