கடந்த 15.10.2014 அன்று இறைவனடி சேர்ந்த, யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை அவர்களின் இறுதிக் கிரியைகள் செவ்வாய்க் கிழமை 21.10.2014 அன்று லண்டனில் இடம்பெறவுள்ளது.
21.10.2014 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 1.00மணி வரை இறுதிக்கிரியைகள் KNK Stadium, Imperial Fields, Bishopsford Road, Morden, Surrey, SM4 6BF என்னும் இடத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்துபிற்பகல் 02.15 மணிக்கு Croydon cemetery, Mitcham Road, Croydon, CR0 3AE என்னும் இடத்தில் தகனம் நடைபெறவுள்ளது என உறவினர்கள் அறியத் தருகின்றார்கள்.
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் 15.10.2014 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமித்துரை சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சொர்ணலட்சுமி அவர்களின் அன்பு கணவரும் ஆவார்.
அன்னார் ராதா, சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற சிவராசா, காலஞ்சென்ற ஞானசுந்தரும், ஞானேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,
இன்பராணி காலஞ்சென்ற கந்தசாமித்துரை, புஷ்பராணி, பாக்கியராணி, பாலச்சந்திரன், ஞானச்சந்திரன், செல்வராணி, சுரேஸ்சந்திரன், காலஞ்சென்ற சுந்தர்ராணி, யூவராணி ஆகியோரின் அன்பு தந்தையும்,
சுந்தரவடிவேல், மகேந்திரராணி, நமச்சிவாயம், ஜெயதாஸ், ரஜனி, யோகராணி, ராஜமோகன், பிரசாந்தி, அருள்சிவம், ஆயோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.