வடக்கின் பிரமாண்டமான மீன் வளர்ப்பு திட்டம் -காணொளி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2023 (சனிக்கிழமை)
நாங்கள் வடக்கில் சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் பல திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
அதில் ஒன்றுதான் இந்த மீன் வளர்ப்புத்திட்டம்:
வடக்கின் பிரமாண்டமான மீன் வளர்ப்புத்திட்டம் (NLAF)
North's Largest Aquaculture (NLAF)
இலங்கையில் 60சத வீதமானவர்கள் மூன்று நேரம் உணவு சரியாக உண்பதற்கு வழியில்லாமல் இருப்பதை அறிந்திருப்பீர்கள். இந்த பிரச்சினையை ஒழிப்பதற்கு ஒரு சிறு பங்காற்றும் முகமாக.
வடக்கின் பிரமாண்டமான மீன் வளர்ப்புத்திட்டம் (NLAF)
North's Largest Aquaculture (NLAF)
ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.
நோக்கம்: 5 வருடத்துக்குள் 2-3 மடங்கு சிறு கடல் வாழ் உயிர் இனங்களை அறுவடை செய்வதே ஆகும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் வடக்கில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் தேவையான மீன்களின் கொள்வனவு விலையையும் குறைப்பதற்கும், மீன் பொதியிடல் மற்றும் பதனிடல் போன்ற சில நிறுவனங்களையும் உருவாக்குவதற்குமாக இத் திட்டத்தை 2023 – 2028 ஆண்டுகளில் நடைமுறை படுத்த உத்தேசித்துள்ளோம். இத் திட்டத்தின் பிரகாரம் 5 இடங்களில் 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட தடுப்பு கம்பி வலைகள் போடப்பட்டு 500 சதுர கிலோமீட்டர் கொண்ட நீர்வளபரப்பு உருவாக்கப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.