கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் வேலைகளை முன்னெடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வல்வைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் உயர் அதிகாரிகள் நீச்சல் தடாகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வல்வை ரேவடிக் கடற்கரையில் அமைந்துள்ள தற்பொழுது சுங்க இலாகாவிற்குச் சொந்தமான காணியை பார்வையிடபின், வல்வை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்த நிதியம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படவுள்ளது.
வல்வை ரேவடிப் பகுதியில் அமையவுள்ள ஆழிக்குமரன் நினைவு நீச்சல் தடாக வலயத்தை ஸ்தாபிப்பதற்கான நிதியம் ஒன்றை ஆரம்பிப்பது என்றும், அந்த நிதியத்தில் அமைச்சர் மங்கள சமரவீர தனது நிதியாக 10 லட்சம் கொடுப்பதாகவும், திருமதி ஆழிக்குமரன் ஆனந்தன் மனைவி, பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரின் நண்பர்கள், ஆதரவாளர்கள், நீச்சல் தடாக நிதியாக 5 கோடி கொடுக்கவுள்ளதாகவும், இந்த நிதியத்தில் பொதுமக்களும் தமக்கு விருப்பினால் தமது பங்களிப்பாக
நிதியினை வைப்பிலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் மங்கள சமரவீர ஆனந்தனின் மனைவி திருமதி மனல் ஆனந்தனின் நெருங்கிய உறவினர் எனபது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: September 14, 2016 at 02:03
மிக்க மகிழ்ச்சி !
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.