இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த பறவைகள் பூங்கா கண்டி ஹந்தானையில் உருவாக்கப்பட்டுள்ளது.
“ஹந்தானை சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம்” என அழைக்கப்படவுள்ள குறித்த பூங்கா, அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாளைய தினம் பிற்பகல் 03.00 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா வரும் 23 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.
ஹந்தானைதேயிலை அருங்காட்சியக வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த 27 ஏக்கர் புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நூற்றிற்கு மேற்பட்ட புலம்பெயர் பறவைகளின் இருப்பிடமாக உள்ளது
குறித்த பறவைகள் பூங்காவானது புலம்பெயர்ந்து வரும் பல பறவைகளின் இருப்பிடமாக உள்ளதுடன், காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளித்து விடுவிக்கும் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த பூங்காவை அபிவிருத்தி செய்வதற்காக 490 மில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கம் இதுவரை செலவு செய்துள்ளது.
வித்தியாசமான பல வெளிநாட்டு பறவைகள் இங்கு உள்ளதுடன், அவற்றை பராமரிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பூங்கா 40 வருட காலப்பகுதியில் இலங்கைக்கு சொந்தமான பறவைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது.
இதன் முதற் கட்டமாக புலம்பெயர் பறவைகளை உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு பார்வையிடுவதற்கு ஸந்தர்பம் வழங்கப்பட்டுள்ளது.
விலங்கியல் மாணவர்களுக்கான கல்விப் பயிற்சி நிலையம், பறவைகள் காப்பகம், பறவைகள் தங்குமிடம் மற்றும் ஒரு தனிமைப்படுத்தும் பிரிவும் என்பனவும் உள்ளன.
இந்த பூங்காவில் வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான அலகும், பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மற்றும் பொழுது போக்கு மையம் மற்றும் இயற்கைப் பறவைகள் ஆய்வு மையம் என்பனவும் உள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.