வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.
வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து நேற்று வியாழக்கிழமை மாலை தமிழ் மக்கள் பேரவை அவசரமாக யாழ்ப்பாணத்தில் கூடி பேசியது. இதன்போதே இந்த அழைப்பை விடுத்துள்ளது.
முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆளுநரிடம் கையளித்த மனுவை வாபஸ் பெறுமாறும் கோரியுமே வடக்கில் இன்று பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு பேரவை தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த முடிவை மேற்கொண்ட பின்னர் தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சரின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து ஆதரவு வழங்கியுள்ளனர்.
கீழே படங்களில் வல்வையில் கடைகள் பூட்டப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிகிக்கப்படுவதைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.