சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் கலந்துகொள்ளும் ஹாட்லி மாணவன் பிரகாஷ்ராஜ்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2018 (சனிக்கிழமை)
இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் (56th Junior national athletic championships 2018) இறுதி நாளான நேற்று முன்தினம் (26) நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மெட்டி எறிதல் போட்டியில் யாழ். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் சிவகுமார் பிரகாஷ்ராஜ் புதிய போட்டி சாதனை படைத்தார்.
39.73 மீற்றர் தூரத்தை எறிந்து சிவகுமார்பிகாஷ்ராஜ் போட்டிக்கான புதிய சாதனையை படைத்தார்
எதிர்வரும் மே மாதம் 5 ஆம்மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பில்நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்டமெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கை அணிக்கு தகுதிபெற்ற முதல் வடமாகாண வீரராகம் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.
குறித்த போட்டியில் கலந்துகொண்ட ஹாட்லி கல்லூரியின் மாணவர்கள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஹார்ட்லி கல்லூரி வீரர்களான வி. யதார்த்தன் வெள்ளிப்பதக்கத்தையும், 18 வயதுக்குட்பட்ட தட்டெறிதலில் பங்குபற்றி, இம்முறை 20 வயதுக்குட்பட்ட சம்மெட்டி எறிதலில்முதற்தடவையாகக் கலந்துகொண்ட டி. அபிஷாந்த், 31.56 மீற்றர் தூரத்தை எறிந்துவெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
இந்நிலையில், இம்முறை கனிஷ்டமெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித்தொடரில் ஹார்ட்லி கல்லூரி, ஓரு போட்டிசாதனையுடன், 2 தங்கம், 2 வெள்ளி மற்றும்ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று எறிதல்போட்டிகளில் தொடர்ச்சியாக தமதுஆதிக்கத்தை செலுத்தியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.
ஹாட்லி கல்லூரி வீரர்களின் பயிற்றுவிப்பாளராக வ.கரிகரன் இருந்து வருகின்றார்.
போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் கடந்த 22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.