ஹாட்லி கல்லூரி மாணவன் சாதனை, அமெரிக்காவில் இடம்பெற்ற சர்வதேச கண்காட்சியில் பங்கேற்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2015 (வியாழக்கிழமை)
அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த வருடத்திற்கான சர்வதேச விஞ்ஞான பொறியியல் கண்காட்சியில் (International global science competition) யாழ் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் செல்வன் சிவதர்சன் மகேந்திரன் பங்குபற்றி சாதனை நிலை நாட்டியுள்ளார்.
இந்த சர்வதேச விஞ்ஞான பொறியியல் கண்காட்சியானது அமெரிக்காவின் Pennsylvania இல் இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
செல்வன் சிவதர்சன் மகேந்திரன்
இலங்கையிலிருந்து சென்றிருந்த 5 கண்டுபிட்டிப்பாளர்களில் இவர் மட்டுமே ஒரேயொரு தமிழர் ஆவார். செல்வன் சிவதர்சன் மகேந்திரன் “கண்களுக்கு பாதுகாப்பான மின் சிக்கன விளக்கினை (Eye protective energy saving lamp) கண்டு பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சர்வதேச விஞ்ஞான பொறியியல் கண்காட்சியில் 70 நாடுகளைச் சேர்ந்த 1700 இளம் கண்டுபிடிப்பாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
ஹாட்லி கல்லூரியில் 11 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் இவர் புலோலி சின்னத்தாயைச் சேர்ந்தவர் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: May 21, 2015 at 22:31
வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் ! வாழ்க வளமுடன் !! கல்வியால் நாம் உயர்வோம் நம்மால் நம் மொழியும் நம் நாடும் உயரட்டும் . வாழ்த்துக்கள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.