கடந்த வாரம் ஆரம்பித்துள்ள வட கிழக்கு பருவப் பெயர்ச்சிக் காலநிலையைத் தொடர்ந்து வல்வை உட்பட யாழ் தீபகற்பத்தின் பல இடங்களில் நேற்றிலிருந்து தற்பொழுது வரை மழை பெய்துவருகின்றது. அத்துடன் தொடர்ந்தும் பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், மழையும் பெய்து வருகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின்; சில இடங்களில் 100 மி.மீ அளவான மழை பதிவாகக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை, மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.