கடத்தப்பட்ட கப்பல் Aris 13 இல்உ ள்ள இலங்கையர்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2017 (புதன்கிழமை)
நேற்று முன்தினம் கடத்தப்பட்ட Aris 13 என்னும் சிறிய ரக கப்பல் எண்ணை தாங்கிக் கப்பல் (Bunkering Tanker) கப்பலில் உள்ள மாலுமிகள் எண்மரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஏற்கனவே உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்களின் விபரம் வருமாறு
தலைமை அதிகாரி - மதுகமவைச் சேர்ந்த ருவன் சம்பத்
தலைமை பொறியியலாளர் - ஹொரண பகுதியைச் சேர்ந்த ஜே.களுபோவில
மாலுமி - மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.நிகோலஸ்
மூன்றாவது அதிகாரி - காலியைச் சேர்ந்த திலிப் ரணவீர
மூன்றாவது பொறியியலாளர் - மாத்தறையைச் சேர்ந்த ஜனக சமேந்திர
கந்தானையைச் சேர்ந்த சுனில் பெரேரா (bosun),
அகுரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த லகிரு இதுநில் விதானபதிரன,
நீர்கொழும்பைச் சேர்ந்த ஏ.சண்முகம்
ஆகியோரே அந்தக் கப்பலில் உள்ள இலங்கையர்கள் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இதேவேளை கடத்தப்பட்ட மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்பை ஏற்படுத்தி செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.