வல்வெட்டித்துறை காங்கேசந்துறை பருத்தித்துறை வீதியில் வேம்படி பகுதியில் அமைந்துள்ள மரத்தில் அமையப்பெற்ற அம்மனிற்கும் நவராத்திரி பூசை நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது. வல்வெட்டித்துறை பகுதியில் மரத்தின் பெயரைத் தாங்கியுள்ள இரண்டு இடங்களில் வேம்படி ஒன்று ஆகும்.
கீழே படத்தில் காணப்படும் காட்சிகள் வேம்படி என்னும் இடத்தின் பெயரத் தாங்கி நிற்கும் பாரிய வேம்பு மரமும், அதில் அமையப்பெற்ற அம்மனிற்கு நடைபெறும் நவராத்திரி பூசை நிகழ்வும் ஆகும்.
குறித்த காங்கேசந்துறை பருத்தித்துறை வீதி அகலப்படுத்தப்படும் பொழுது, பெயரைத் தாங்கி நிற்கும் இந்த வேம்பு மரம் அகற்றப்படுவது தவிர்க்கப்படமுடியாததாகவிருக்கும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.