96 வருடங்களாக தொடர்ந்து சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கப்பல் ஒன்று விபத்து ஒன்றைச் சந்தித்து தனது அழிவைத் தேடிக் கொண்டுள்ளது. 30 வருடங்களுக்கு மேல் கப்பல் ஒன்று சேவையில் ஈடுபடுவதே கடினம் என்ற நிலையில் 96 வருடங்களாக அதுவும் ஒரு வளர்ச்சி அடைந்த நாடான நியூசிலாந்து கடற்பரப்பில் சேவையில் ஈடுபட்டு வந்தது Tuhoe என்னும் கப்பல்.
கடந்த 27 ஆம் திகதி Waimakariri (South Island, New Zealand) என்னும் பகுதியில் தரை தட்டி (Grounding) விபத்தைச் சந்திக்கும் முன்னர், நியூசிலாந்து Lyttelton பகுதியில் $200,000 செலவழித்து தன்னை மீள் புத்துப்பித்து திரும்பிக் கொண்டிருந்தது இந்தக் கப்பல்.
தரைதட்டிய பின்னர் உண்டான சேதங்களை அடுத்து உள்ளூர் அதிகாரிகளின் முடிவுக்கு இணங்க 1919 கட்டப்பட்ட குறித்த இந்தக் கப்பலை வெட்டி அழிக்க முடிவெடுக்கப்பட்டு, கப்பலை துண்டு துண்டாக வெட்டும் பணியும் நடைபெற்று கடந்த 1 ஆம் திகதி முடிவுக்கு வந்துள்ளது.
தரைதட்டிய நிலையில் 9 6 வயதுடைய கப்பல்
அழிவுக்கு வந்த 96 வயது சரித்திரக் கப்பல் Historic ship Tuhoe runs aground in Newzealand, later completelyhttp://www.valvettithurai.org/historic-ship-tuhoe-runs-aground-in-newzealand-later-completely-5106.html
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.