இன்று 'Day of the Seafarer 2015', மாலுமிகள் உங்கள் படங்களை தரவேற்றம் செய்யமுடியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2015 (வியாழக்கிழமை)
உலகில் உள்ள மாலுமிகள் இந்த உலகின் பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் ஆற்றிவரும் சேவையினைக் கெளரவிக்கும் முகமாக, International Maritime Organisation (IMO) இனுடைய 8 ஆவது மாலுமிகள் தினம் (Day of the Seafarer 2015) இன்று ஜூன் 25 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி இந்த வருடத்தின் கருப்பொருளாக “கடல்சார் பயிற்சிகளும்” மற்றும் இளம் சந்ததியினரை இந்த துறைக்குள் கொண்டுவருதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்காக IMO, உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தற்போதைய மாலுமிகள், அமைப்புக்கள், கப்பல் அதிபர்கள், துறைமுக அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களை தமது கடல் அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மாலுமிகள் தின பரப்புரையை மேன்மைப்படுத்துவதற்காக, மாலுமிகள் தங்கள் புகைப்படங்களை, IMO புதிதாக உருவாக்கியுள்ள “Photo Wall” என்னும் பகுதியில் தரவேற்றம் செய்யுமாறு வேண்டியுள்ளது.
படங்கள் செல்பியாகவோ, நீங்கள் வேறு துறைமுக நகர்களில் எடுத்ததாகவோ, கப்பலில் வேலை செய்யும் போது எடுத்ததாகவோ என எவ்வாறாயினும் இருக்க முடியும் என IMO அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.