எண்ணூர் கடலில் எண்ணைக் கசிவு, கப்பல்கள், மாலுமிகள் தடுத்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/02/2017 (புதன்கிழமை)
கடந்த 28 ஆம் திகதி தமிழகத்தின் எண்ணூர் துறைமுகத்திற்கு அப்பால் மோதி விபத்துக்குளாகி கடலில் எண்ணைக் கசிவை உண்டாகக் காரணமான 2 கப்பல்கள் மற்றும் அதன் மாலுமிகள் சென்னை துறைமுக அதிகாரிகளால் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என Reuters ஆதாரம் காட்டி கடலியல் சார் இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 41,000 கன மீட்டர்கள் கொள்ளளவுடைய திரவநிலை பெற்றோலிய வாயுவை (liquefied petroleum gas - LPG) சுமந்து கொண்டிருந்த BW Maple என்னும் கப்பல் ஒன்றும் Dawn Kanchipuram என்னும் இந்தியாவிற்குச் சொந்தமான கப்பல் ஒன்றும் மோதிக் கொண்டதில் சுமார் 20 டன் அளவுடைய மசகு எண்ணை கழிவு (sludge) கடலில் கொட்டப்பட்டுள்ளது.
இது சென்னையின் மரினா கடற்கரை வரை சுமார் 18 மைல்கள் வரை பரவியுள்ளது. குறித்த எண்ணைக் கழிவுப் படலத்தை அகற்ற இன்னும் சில தினங்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.