3400 மைல்கள் நீளமான கடற்கரையோரத்தை இந்தியா கொண்டுள்ள போதும் இந்தியாவின் கடலோர கப்பல் வாணிபம் (India’s coastal shipping sector) ஒரு குழந்தைப் பருவத்திலியே உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு இந்தியாவின் கடல் வள அமைச்சு, 10.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 'Sagar Mala Project' என்னும் ஒரு மிகப் பெரிய 5 வருட திட்டத்தை வகுத்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் பிரதான துறைமுகங்கள் நவீன மயப்படுத்தப்படவுள்ளதுடன், துறைமுகங்களுடனான தொடர்புகள் மேலும் செழுமையாக்கப்படவுள்ளன.
இந்தியாவின் துறைமுகங்கள் ஏனைய கொழும்பு போன்ற துறைமுகங்களுடன் ஒப்பிடும் இடத்து வர்த்தகத்தில் பின் தங்கியுள்ளதால், பெரும்பாலும் கப்பல்கள் அதிக நேரம் இந்திய துறைமுகங்களில் செலவிட வேண்டியுள்ளது.
இந்திய துறை முகங்களில் சராசரியாக ஒரு கப்பல் 4 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சிங்கப்பூரில் இதே நேரம் வெறும் 4 மணித்தியாலகளுக்கு குறைவாகவே உள்ளது. மேலும் தற்பொழுது கொழும்பு போன்ற துறைமுகங்களில் கையாளப்படும் மிகப்பெரிய மற்றும் பெரிய கப்பல்கள், குறிப்பாக கொள்கலன் கப்பல்கள் (Container ships) இந்திய துறை முகங்களில் கையாளப்படமுடியாதநிலை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.