கொழும்புக்கு போட்டியாக நிக்கோபாரில் பாரிய துறைமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2020 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள நிக்கோபார் தீவில் (Great Nicobar Island) பொருட்களை இறக்கி களஞ்சியப் படுத்தி மீண்டும் ஏற்றும் துறைமுகம் (Transshipment port) ஒன்றை உருவாக்க முயற்சி எடுத்துள்ளது. குறித்த இந்த துறைமுகம் 1.33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமையவுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான முதலாவது கடலுக்கு அடியிலான 'Optical fiber project' ஐ ஆரம்பித்து வைத்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்குறித்த திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு நிக்கோபாரில் அமையப் பெறும் துறைமுகம், தற்பொழுது தெற்காசியாவில் 'Transshipment port' ஆக விளங்கி வரும் கொழும்புக்கு மாற்றீடான ஒரு துறைமுகமாக விளங்கும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.