Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் மாங்கல்யானை நிலைநிறுத்தியது இந்தியா!

பிரசுரிக்கபட்ட திகதி: 25/09/2014 (வியாழக்கிழமை)

மாங்கல்யான் விண்கலத்திலிருந்த  LAM(440 Newton Liquid Apogee Motor) என்ஜின்  இன்று புதன்கிழமை இந்திய நேரப்படி  காலை 7.17இலிருந்து 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதில் செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணத்தில் முதற்தடவையிலேயே வெற்றி பெற்ற நாடு என்ற பெருமையை தனதாக்கி கொண்டுள்ளது இந்தியா.

இந்தியாவின் செவ்வாய் நோக்கிய திட்டமானது 10க்கு மேற்பட்ட வெற்றிகரமான செய்மதி ஏவல்களுடனும். 2008ம் ஆண்டு சந்திரனை நோக்கி அனுப்பிய சந்திராயன்-1 விண்கலம் சந்திரசுற்றுவட்டப்பாதையில் பயணித்து சந்திரனில் நீர் உள்ளது என்பதற்க்கான முக்கிய ஆதாரத்தை கண்டறிந்ததை தொடர்ந்து, 2010ம் ஆண்டு செவ்வாயை நோக்கிய திட்டம் முன்மொழியப்பட்டு மத்திய அரசு 2011இலேயே ஒப்புதல் அளித்து 2012 இலேயே முறையாக அனுமதிக்கபட்டு  2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி PSLV-C25 ரொக்கெட் மூலம் ஏவப்பட்டது.

தொடர்ந்து பயணித்த மாங்கல்யான் 6 தொடர்ச்சியான எரியூட்டல்கள் மூலம் 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி பூமியின் சுற்ற்வட்டப்பாதையில் இருந்து செவ்வாயை நோக்கியதான தனது பயணத்தை ஆரம்பித்தது. பின்னர் செவ்வாயை நோக்கிய பயணத்தில்  2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி திரவ என்ஜின்கள் எரியூட்டப்பட்டு செவ்வாயின் சுற்றுவட்டப்பாதை நோக்கி செல்லுவது உறுதிப்படுத்தபடுகிறது. மீண்டும் இரண்டாவது தடவையாக 2014ம் ஜூன் மாதம் 14ம் திகதி பயணப்பாதை திருத்தபடுகிறது. இறுதியாக இம்மாதம் 14,15ம் திகதிகளில் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் செல்லுவதற்கான கட்டளைகள் இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ள இந்திய விண்வெளி மையம் இஸ்ரோவில் இருந்து மாங்கல்யானுக்கு வழங்கப்படுகின்றன.பெங்களூரில் இருந்து கட்டளைகள் மாங்கல்யானுக்கு சென்றடைய 12 நிமிடங்கள் எடுக்கின்றன.

இறுதியாக நேற்று முன்தினம் 22ம் திகதி செவ்வாயின் சுற்ற்வட்டப்பதைக்கான இறுதித்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு LAM எஞ்சினும் 4 செக்கன்கள் எரியூட்டப்பட்டு பரிசோத்திக்கப்ட்டு செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து 515 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் வலம்வருவதற்கு ஏற்ற முறையில் தயார் செய்யப்பட்டு இன்று இறுதியாக வெற்றிகரமாக சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது.

மேற்படி மாங்கல்யான் விண்கலமானது ஒரு சாதாரண காரை ஒத்த வெறுமனவே 1337 கிலோகிராம் ஆகும். இதற்கான தயாரிப்பு செலவு வெறுமனவே 74 மில்லியன் டாலர்கள் மட்டுமே ஆகும். என்னடா வெறுமனவே 74 மில்லியன் டாலர் என்று சொல்கிறேன் என்று பாக்கிறீர்களா? மாங்கல்யான் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதைக்கு முன் சரியாக 48 மணிநேரம் முன்பு 22ம் திகதி சென்றடைந்த அமெரிக்காவின் MAVEN இன் தயாரிப்பு செலவு 671 மில்லியன் டாலர்கள் ஆகும்.

இவ்வளவும் சரி மாங்கல்யானின் நோக்கம் என்னவென்று பார்ப்போமானால், செவ்வாயின் வளிமண்டலம் பற்றி ஆராய்வது, செவ்வாயின் மேற்பரப்பை வரைபடமாக்குவது,மேலும் செவ்வாயில் உள்ள கனிம வளங்களை பற்றி ஆராய்ச்சி செய்யவுள்ள நிலையில் மேலதிகமாக இதில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சென்சரின் மூலம் செவ்வாய்க்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதுக்குரிய சாத்தியங்கள் உள்ள மெதேன் இருக்கின்றதா என்றும் பரிசோதிக்கவுள்ளது. கிட்டதட்ட ஒரே நோக்கத்துடன் அனுப்பட்ட MAVEN இல் இது இல்லை என்பதில்தான் இந்தியா இன்னும் ஒருபடி மேலே நிற்கின்றது.

மாங்கல்யானுடன் விண்வெளிபோட்டியில் இந்தியா மாபெரும் பாய்ச்சல் ஒன்றை செய்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்களுக்கு இணையாக வந்துள்ளதோடு மட்டுமல்லாமல் இதன் தாக்கம் அரசியல் ரீதியாகவும் பிராந்தியத்தில் ஜப்பான் 2003ம் ஆண்டும். சீனா 2011ம் ஆண்டும் தோல்வியுற்றதில் இந்தியா ஒரே படியில் சாதித்து காட்டியுள்ளது.

என்னதான் இருந்தாலும் மாங்கல்யான் தொடர்பான சர்ச்சைகளும் ஆரம்பத்தில் இருந்தன. நாட்டின் சனத்தொகையில் 30 வீதமானோர் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும்போது இத்திட்டம் அவசியம்தானா என்று இதற்கு அந்நேரம் பதிலளித்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் மொத்த பட்ஜெட்டில் 1 வீதம்தான் இஸ்ரோவுக்காக ஒதுக்கபடுகிறது என பதிலளித்திருந்தார்.


மேலும் இந்தியா முதன்முறையாக செவ்வாய்க்கு விண்கலத்தை செலுத்துவதால் தொடர்ச்சியான எரியூட்டல்கள் மூலம் விண்கலத்தை நீண்ட தூரம் விண்வெளியில் நகர்த்தி செல்வது, சுற்றுவட்டப்பாதையில் விண்கலத்தை செலுத்தும் உத்திகள், விண்கலத்தின் நிலையை கண்டறிவதற்கான உத்திகள், விண்கலத்துடன் தொடர்பு கொள்ளும் உத்திகள் என்பவற்றை சர்வதேச விண்வெளி நிறுவனங்கள் உற்றுநோக்கியிருந்தன. இந்த மாங்கல்யான் வெற்றி தொழிநுட்பரீதியாகவும் இந்தியாவுக்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்திருக்கின்றது.


செவ்வாய்க்கிரகத்தின் தமது வெற்றிப்பயணத்தை தொடர்ந்து அடுத்து  இந்தியா அதன் வெற்றிகர தொழில்நுட்ப விடயங்களை சந்திரனுக்கான தமது பயணத்தில் புகுத்தி 2016ம் ஆண்டு ஏவப்பட்டவுள்ள சந்திராயன் 2க்கான வடிவமைப்புக்கான பணிகளில் துரிதமாக மேற்கொள்ளவுள்ளது.

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
வியாபார கொமிஷனுக்கு பலத்த அடி!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
நாகை - காங்கேசன்துறை சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இரத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2024 (சனிக்கிழமை)
கடலியல் துறையில் டிப்ளமோ பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
சங்கீதப் போட்டியில் சிவகுரு இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி- கனகசுந்தரம் முருகமூர்த்தி, பவாணி முருகமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
யாழ் - கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தேசிய மட்ட தனி நடனப் போட்டியில் வட இந்து மாணவி முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2024 (திங்கட்கிழமை)
ஹாட்லி கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் கல்லூரி நாளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஈழத்து சௌந்தர்ராஜன் வியஜரட்ணம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
பழைய மாணவர் சங்கம் மீள் உருவாக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
செல்வச் சன்னிதியில் இடம்பெற்ற சூரன் போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2024 (வெள்ளிக்கிழமை)
ஒன்லைன் கடவுச்சீட்டு Appointment புதிய முறை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2024 (புதன்கிழமை)
77 ஆவது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2024 (செவ்வாய்க்கிழமை)
‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக்கொள்கையும்’  நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கந்தசஷ்ட்டி விரதம் அனுட்டிப்போருக்கு பழங்கள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பல வருடங்களின் பின் பலாலி - வாசவிளான் வீதி மக்கள் பாவனைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி திருவிழா 2025
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
விளம்பரம் - காணி விற்பனைக்கு (ஊரிக்காடு)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை 2 ஆக அதிகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி நடனசிகாமணி மகாலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் செல்வி கஜிஷனா தர்ஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
இன்றைய நாளில் - ஒப்பரேசன் ரிவிரச மற்றும் யாழின் மாபெரும் இடப்பெயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - தியாகராஜா சண்முகராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2024 (செவ்வாய்க்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை புகையிரத சேவை நாளை மீண்டும் ஆரம்பம் (நேர விபரம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/10/2024 (ஞாயிற்றுக்கிழமை)
நெல்லியடியில் கஜேந்திரகுமார் கைதாகி விடுதலை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2024 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2028>>>
SunMonTueWedThuFriSat
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai