போதைப்பொருள் கடத்தலுக்காக இந்தோனிசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2015 (சனிக்கிழமை)
இந்தோனிசியாவில் போதைப் பொருள் கடத்தலுக்காக மரணதண்டனை பெறவுள்ள அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன் மற்றும் ஆண்ட்ரூ ஸான் ஆகிய இருவரது மரண தண்டனையை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு இந்தோனிசிய அரசு தள்ளிவைத்துள்ளது.
முன்னர் இந்தோனிசிய அரசு, இந்த மாத இறுதியில் குறித்த இருவரையும் துபாக்கியினால் சுட்டு மரணதண்டனை கொடுக்க முடிவுசெய்திருந்தது.
மரணதண்டனையில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆனது, அவுஸ்திரேலிய அரசு கொடுத்த அழுத்தம் என்பதனை மறுத்துள்ள இந்தோனிசியா, தாமததிற்கான காரணம் சில “தொழிநுட்ப காரணங்கள்” என்றும், மரண தண்டனை இன்னும் 3 வாரங்களிலிருந்து 1 மாதத்தினுள் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளது.
மேற்குறித்த தகவலை இந்தோனிசியாவின் துணை ஜனாதிபதி ஜூசுஃப் கல்லாவுனுடைய (Jusuf Kalla) அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.