விமானத்தில் முதல்தர அதிகாரியாகும் வல்வையைச் சேர்ந்த பெண்மணி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2016 (வியாழக்கிழமை)
யாழ் வல்வெட்டிதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட டென்மார்க்கைச் சேர்ந்த செல்வி அர்ச்சனா செல்லத்துரை வர்த்தக விமானங்களைச் செலுத்தவல்ல விமானியாகத் தகுதி பெற்று, நேற்று முன்தினம் 15 ஆம் திகதி முதல் முழுமையான தொழில்முறை பைலட் ஆக வெற்றிகரமான ஒரு பறப்பினை மேற்கொண்டுள்ளார்.
“மிகவும் காத்திரமாக இருந்த விமானப் பயணம், எனது வாழ்க்கையில் பலவற்றை இதற்காக தியாகம் செய்துள்ளேன், நண்பர்களை இழந்துள்ளேன், குடும்பத்தினரை இழந்துள்ளேன், இளம்பராயத்தில் பெற்றிருக்கவேண்டிய குதூகலங்களை இழந்துள்ளேன், பலதடவைகள் கண்ணீர் சிந்தியுள்ளேன், ஆனாலும் இப்பொழுது நான் புன்னைகைக்கின்றேன், இது போன்று எனது வாழ்க்கையில் நான் முன்னர் எப்போதும் புன்னைகைத்ததில்லை, இது மிகவும் பெறுமதியானது” என தனது முதலாவது பயணத்தின் பின் தனது எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார்.
‘European Commercial Pilot License & Instrument rating on Multi engine Aircraft’ என்னும் சான்றிதழை சுவீடனின் ‘Diamond Flight Academy Scandinavia’ என்னும் விமான தொழிற்கல்லூரியில் இந்த வருடம் பெற்றுக் கொண்ட செல்வி அர்ச்சனா., டென்மார்க்கில் அமைந்துள்ள ‘Learn to Fly’ என்னும் விமான தொழிற்கல்லூரியில் ‘Frozen Airline Transport Pilot License’ என்னும் சான்றிதழை கடந்த 2014 ஆம் ஆண்டு பெற்றுளார்.
தனது தற்போதைய தகமைகளுக்கு அமைய ‘ATR42/72-500’ மற்றும் ‘Do320-300 JET’ ஆகிய வர்த்தக விமானங்களை (Commercial air craft) முதல் தர அதிகாரியாக (First Officer) செலுத்த தகமை பெற்றுள்ளார்.
இலங்கையில் முன்னணி துறைகளில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு வாய்ப்புக்கள் வழக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றபோதிலும், கடந்த உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த தமிழர்கள் பற்பல துறைகளில் தமது ஆழுமைகளை உலகின் பல நாடுகளில் வெளிப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட முதாலாவது இதுபோன்ற முதாலாவது முதல்தர பெண் விமான அதிகாரியாக செல்வி அர்ச்சனா செல்லத்துரை விளங்குகின்றார் எனக் கருதப்பட்டபோதும் இதனை உறுதிப் படுத்த முடியவில்லை.
வல்வெட்டித்துறை.ஓஆர்ஜி இணையதளத்தின் இரண்டாவது வருட பூர்த்தியின் போது செல்வி அர்ச்சனா தமது வாழ்த்துச் செய்தியை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ச்சனாவின் தந்தை திரு.செல்லத்துரை வல்வையின் மூத்த கலைஞர்களில் ஒருவர் என்பதுடன், வல்வையின் குறிப்பிடக் கூடிய எழுத்தாளர்களில் ஒருவரும் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.