யாழிலிருந்து கிளிநொச்சிக்கு ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2014 (புதன்கிழமை)
யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கிடையே குறுந்தூர ரயில் சேவை ஒன்று இன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.05 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து ஆரம்பமாகிய இச் சேவை தினமும் இரண்டு தடவைகள் யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கும் இடையே இடம்பெறவுள்ளது.
இவ்வாறு காலை 6.05 மணிக்கு புறப்படும் ரயில் காலை 7.39 மணிக்கு கிளிநொச்சி ரயில் நிலையத்தை சென்றடையும். அங்கிருந்து 8.05 புறப்படும் ரயில் முற்பகல் 10.08ற்கு யாழ். நிலையத்தை வந்தடையும். மீண்டும் மாலை 4 மணிக்கு யாழில் இருந்து புறப்படும் ரயின் மாலை 5.35 மணிக்கு கிளிநொச்சியை சென்றடையும்.
மீண்டும் கிளிநொச்சியில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.52 மணிக்கு யாழ்.நிலையத்தை வந்தடையும். இச் சேவையில் மூன்றாம் வகுப்பு ஆசனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது என்றும் யாழில் இருந்து கொடிகாமத்திற்கு 30 ரூபாவும், கிளிநொச்சிக்கு 90 ரூபா அறவிடப்படும்.
மேலும் யாழில் இருந்து கிளிநொச்சி வரையுள்ள அனைத்து தரிப்பு நிலையங்களிலும் குறித்த ரயில் தரித்துச் செல்லவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.