வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் - 3ஆம் பகல் இரவுத்திருவிழாவின் படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2014 (வெள்ளிக்கிழமை)
கம்பர்மலை வல்வெட்டி வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் 3ஆம் நாள் பகல், இரவுத் திருவிழாக்கள் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயமானது, பருத்தித்துறை யாழ்ப்பாண வீதி வல்வெட்டித்துறைக்கும் உடுப்பிட்டிக்கும் இடையில் வல்வை சந்தியிலிருந்து 1.5 Km தொலைவில் தெற்கு திசையில் அமைந்துள்ளது.
பகல் திருவிழாவிற்கான பூசைகள் 10.00 மணியளவில் ஆரம்பமாகி, வசந்த மண்டப பூசைத் தொடர்ந்து அம்பாள் வெள்ளிச் சிங்க வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
இரவுத் திருவிழாவிற்கான பூசைகள் 07.00 மணியளவில் ஆரம்பமாகி, வசந்த மண்டப பூசைத் தொடர்ந்து அம்பாள் இரட்டை சிங்க வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.