காங்கேசன்துறை நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/10/2023 (திங்கட்கிழமை)
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே நாளை (10) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, சேவையில் ஈடுபடவுள்ள செரியாபாணி (Cheriyapani) கப்பல் நேற்றும் இன்றும் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்றது.
25 கோடி இந்திய ரூபா செலவில் கொச்சினில் தயாரிக்கப்பட்ட செரியாபாணி கப்பல் மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது.
14 ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளை கொண்ட குறித்த கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சேவைக்காக தயாரிக்கப்பட்ட செரியாபாணி கப்பல் நேற்று முன்தினம் (07) நாகை துறைமுகத்தையும் நேற்றும் சோதனை ஓட்டமாக காங்கேசன்துறைக்கும் வந்தடைந்ததுடன், கப்பலுக்கு சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.
நாகை – இலங்கை கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
இதேவேளை நாளை ஆரம்பமாகும் பயணிகள் கப்பல் சேவை, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜனவரி 16 ஆம் திகதி காலநிலையைக் கருத்திற் கொண்டு இடைநிறுத்தப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.