புத்தாக்கம் தேசிய கண்காட்சியில் இடம்பெற்ற கெருடாவில் இ.த.க 'மீன்தொட்டிக்கான தற்காலிக பிராணவாயு'
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2015 (வெள்ளிக்கிழமை)
கடந்த 26 ஆம் திகதி 28 ஆம் திகதி வரை இடம்பெற்ற 'சாகசக் நிமவும்' என்னும் தேசிய கண்டுபிடிப்பு கண்காட்சியில் (Sahasak Nimavum”, the National Invention Exhibition) யாழ் கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் இருவர்களின் சிந்தனையில் உருவாகியிருந்த 'மீன்தொட்டிக்கான தற்காலிக பிராணவாயு' (Temporary fish tank oxygen) வும் இடம்பெற்றது.
தரம் 8 இல் கல்வி பயிலும் கிருஸ்ணகாந்தன் குமரன் மற்றும் ரவீந்திரன் பதுசன் ஆகிய இருவருமே, மின்சாரம் இல்லாதபோது நன்னீர் மீன்தொட்டிகளில் வாழும் மீன்களுக்கான பிராணவாயுவை செய்யும் முறையை மோட்டார் சைக்கிள் ரியூப் இலிருந்து மீன்தொட்டிக்கு பிராணவாயு செலுத்தும் முறையை செய்து காட்டி இருந்தனர்.
Sri Lanka Inventors’ Commission (SLIC) இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த தேசியக் கண்காட்சி கொழும்பு 2 இல் அமைந்துள்ள Convention Centre இல் இடம்பெற்றது.
இந்தக் கண்காட்சிக்கு யாழ் வடமராட்சியிலிருந்து கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் இருவரினது காட்சிப் பொருளே தெரிவாகியிருந்தது.
கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலையானது வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து மேற்கு தென் மேற்குத் திசையில் சுமார் 2 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.