கீரிமலை - பருத்தித்துறை - கொழும்பு பேருந்து சேவை மீள ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 01.10.2024 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆண்டுவரை இடம்பெற்ற பேருந்து சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள் இன்மை போன்ற காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பிற்பகல் 7:15 மணியளவில் கீரிமலையில் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சாலை முகாமையாளர் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த பேருந்து கீரிமலையிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை, தொண்டமனாறு, வல்வெட்டித்துறை ஊடாக பருத்தித்துறையை இரவு 9:00 மணிக்கு வந்தடைந்து பருத்தித்துறையிலிருந்து மந்திகை மாலிசந்தி நெல்லியடி துன்னாலை ஊடாக வவுனியா அனுராதபுரம் புத்தளம் சிலாபம் வழியாக கொழும்பை சென்றடையும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.