மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த வல்வை பட்டத் திருவிழா 2017 நேற்று எதிர்பார்க்கப்பட்டது போல் மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் மேற்று இடம்பெற்றிருந்தது.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில், வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத் தலைவர் திரு.பா.சிவ அன்பு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வட மாகாண சபை அமைச்சர் டெனிஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் திரு.M.K சிவாஜிலிங்கமும், வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலர் திரு.பிரசாந்த் அவர்களும், கெரவ விருந்தினராக பருத்தித்துறை பிரதேச சபை செயலர் திரு.ஜெயசீலன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
நேற்று பிற்பகல் சுமார் 0330 மணியளவில், வல்வை உதயசூரியன் கடற்கரையில் முதலாவது பட்டம் போட்டிக்கு அழைக்கப்பட்டு தொடர்ந்து சுமார் 0545 மணி வரை ஒன்றன்பின் ஒன்றாக ஏனைய பட்டங்கள் போட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தன.
போட்டியில் பட்டங்கள் ஈடுபட்ட மொத்தப் பட்டங்களின் காட்சிகளைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.