கடற்கரையோரங்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/09/2016 (புதன்கிழமை)
நாட்டின் கடற்கரையோரங்களில் குப்பைகளை கொட்டுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரி.பி.குமார தெரிவித்துள்ளார்.
இதற்காக சீசீரிவி கமராக்கள் மூலம் கடற்கரை பிரதேசத்தினை கண்காணிப்பதற்கு அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வருடாந்தம் கடற்கரை பிரதேசங்களில் 100 மெற்றிக் தொன் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் முகாமையாளர் கூறினார்.
கடற்கரை பிரதேசங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்ப்பதற்காக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.