கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் இன்று வல்வையில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2018 (புதன்கிழமை)
எதிர்வரும் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாரம் எதிர்வரும் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது. இதனையொட்டி பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் இறுதிப் பிரச்சாரங்களும் தீவிரமடைந்துள்ளன. இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகின்றது.
வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (Tamil National allaince) பிரச்சாரக் கூட்டம் இன்று மாலை வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல பேச்சாளர்கள் முன்னெடுத்த இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பல பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப் பங்கீட்டில் வல்வை நகரசபை தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) விற்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் அரசியல் பரப்புரையில் ஈடுபடும் பேச்சாளர்களையும், கூட்டத்திற்கு வந்திருந்த பொது மக்களையும் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
K. Navam (UK)
Posted Date: February 09, 2018 at 08:17
Joint with TNA is the Last mistake what these People and TELO done it! OLD People forgot a lot.
BUT Youngest must know - For this we have to punish them! TIME IS RUNNING OUT FOR TNA - TELO should decide - Running with TNA to run out? or Run out of TNA ?
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.