உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் வல்வையில் தனித்துப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2017 (வியாழக்கிழமை)
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தனித்துப்போட்டியிடுகின்றது.
இதற்கான வேட்புமனுவை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் யாழில் நேற்று தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் குறித்த வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.
வல்வெட்டித்துறை நகரசபையை விட வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேசசபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை நகரசபை ஆகிய 6 சபைகளிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போட்டியிடவுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.