மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அதே வேளை யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்றும் காணப்படுகிறது.
இவை இரண்டும் ஒன்று சேர்ந்து நாளை (08.05.2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அன்றைய தினமே இது புயலாக மாற்றம் பெறும். இப்புயலுக்கு ஏமன் நாட்டின் பெயரான 'மொச்சா' என பெயரிடப்படும்.
இந்த புயல் எதிர்வரும் 10.05.2023 அன்று அல்லது 11.05.2023 அன்று பங்களாதேஷ்க்கும் மியன்மாருக்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் எப்பகுதிக்கும் நேரடியாக எந்த பாதிப்பும் கிடையாது.
ஆனால் இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.