இன்றைய நாளில் - வல்வைக் கடலில் இடம்பெற்ற முதலாவது தற்கொலைத் தாக்குதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/07/2020 (வெள்ளிக்கிழமை)
30 வருடங்கள் முன்பு இன்றைய நாளான 10.07.1990 அன்று வல்வெட்டித்துறை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 'எடித்தாரா' என்னும் கண்காணிப்பு மற்றும் கட்டளைக் கப்பல் (SLNS Surveillance Command Ship Edithara) மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் குறித்த கப்பலான எடிதாராவிற்கு சிறு சேதம் ஏற்பட்டதுடன் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் இருவர் காயம் அடைந்தனர் என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள 'HUMANITARIAN OPERATION FACTUAL ANALYSIS JULY 2006 – MAY 2009' என்னும் வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்குறித்த வெளியீட்டின் பிரகாரம், வல்வெட்டித்துறை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலே விடுதலைப் புலிகளால் கடலில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தற்கொலை தாக்குதல் சம்பவம் எனவும் தெரிகின்றது.
இந்தச் சம்பவத்தில் காந்தரூபன், வினோத் மற்றும் கொலின்ஸ் ஆகிய 3 விடுதலைப் புலிகள் மரணமடைந்திருந்ததாக அன்றைய யாழ் தினசரிப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
பல்வேறு விதமான சம்பவங்களுக்குப் பெயர்போன வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடம்பெற்ற சம்பவங்களில், மேற்குறித்த சம்பவம் மிகவும் பிரதான ஒன்றாகக் கூறப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.