Green Methanol சக்தி கொண்டு இயங்கவுள்ள முதலாவது கொள்கலன்கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2021 (வியாழக்கிழமை)
கீழே படத்திலும் காணொளியிலும் காணப்படுபவை உலகில் முதன் முதலாவது, மெதனோல் கொண்டு ('Carbon neutral' Methanol-powered) இயக்கப்படவுள்ள பாரிய கொள்கலன் கப்பல் (Ultra-large containerships) ஆகும். உலகின் முன்னணி கப்பல் நிறுவனமான Maersk கப்பல் நிறுவனமானது, இவ்வகை 8 கப்பல்களை தென் கொரியாவின் Hyundai Heavy Industries (HHI) நிறுவனத்தில் உருவாக்கவுள்ளது.
இந்த வடிவமைப்பின் பிரதான நோக்கம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து 20 வீதமான சக்தியை (20% improved Energy Efficiency) மேலதிகமாக மிச்சப்படுத்துவதாகும்.
வழமைக்கு மாறாக இந்த வடிவமைப்பில், கப்பலின் பிரதான தொழிற்பாட்டுப் பகுதி (Accommodation) மிகவும் முன்னுக்கும், இயந்திரப் பகுதி பின்னுக்கும் அமையப் பெறுவதால், அதிக கொள்கலன்களை காவக் கூடிய வசதியும், துறைமுகங்களில் கொள்கலன்களை இலகுவாக ஏற்றி இறக்கக் கூடிய வசதியும் கொள்ளவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Capt. Thurailingam (United Kingdom)
Posted Date: December 16, 2021 at 12:58
மிகவும் பலனுள்ள தகவல்கள். Maersk Shipping Company யில் வேலைவாய்ப்புகள் சம்பந்தமாக http://joinmaerskfleet.com/vacancies என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.