96 ஆவது வயதில் தடம் பதிக்கும் மூத்த கடலோடி மகாலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2016 (வியாழக்கிழமை)
40, 50 களில் அன்னபூரணி உட்பட பல பாய்மரக் கப்பல்களில் மாலுமியாகப் பணியாற்றி, பின்னாளில் படகுகளிலும் ‘ஓட்டி’ யாக இருந்து இன்று 11.02.2016 தனது 96 ஆவது அகவையில் கால் பதிக்கின்றார் திரு.நாகமணி மாகலிங்கம் அவர்கள்.
வல்வெட்டித்துறை மதவடியை சேர்ந்த சண்முகம் தன்டையலின் மருமகனான இவர், தற்பொழுது வாழும் மிகப் பழுத்த மூத்த கடல் அனுபவம் பெற்ற ஓரி சிலரில் ஒருவர் ஆவார் என்பதுடன் சிலம்பக் கலையில் சிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. . வல்வை அ.மி.த.க பாடசாலையில் கல்வி கற்றவர்.
90 களின் நடுப்பகுதியில் இந்தியாவின் தமிழகம் சென்று தற்பொழுது திருச்சியில் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.