மெதடிஸ்த பெண்கள் உயர் பாடசாலையில் தொழிநுட்ப ஆய்வுகூடம் திறப்பு (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2015 (வெள்ளிக்கிழமை)
1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட (மஹிந்தோதய) தொழிநுட்ப ஆய்வுகூடம் நேற்று திறந்து வைக்கப்ட்டது.
பாடசாலை அதிபர் செல்வி கிறேஸ் தேவதயானி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி ராஜாங்க அமைச்சர் திரு.வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார்.
இவ்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.த.குருகுலராஜா, மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி.ம.விஜயகலா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஈ.சரவணபவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தில் வடக்கில் 96 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. இவற்றுள் வடமராட்சியில் தெரிவு செய்யப்ட்ட ஏழு பாடசாலைகளில் இரண்டு பாடசாலைகளில் தொழிநுட்ப ஆய்வுகூடங்கள் திறக்கப்பட்டு விட்டன. ஏனையவற்றில் கட்டட வேலைகள் பூர்த்தியடைந்து விட்டது உபகரணங்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன .
இத்தொழிநுட்ப ஆய்வுகூடங்களில் நான்கு பிரிவுகள் உள்ளது தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆய்வுகூடத்திற்கு 42 கணினிகளும் மொழியியல் ஆய்வுகூடத்திற்கு 21 கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன. நெனச தொலைக்கல்வி நிலையத்திற்கு ஒரு பெரிய தொலைக்காட்சியும் தொலைக்காட்சி இணைப்பும் வழங்கப்பட்டுள்ளன. கணித ஆய்வு கூடத்திற்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.