மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2014 (வெள்ளிக்கிழமை)
வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது எதிரணிகளின் பொது வேட்பாளராக போட்டியிடப்போவதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தற்போது கொழும்பு புதிய நகர மண்டபத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியாலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்து அதிகாரத்தைத் தாருங்கள், நூறு நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் எனவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பேன் என்றும் அரசியலமைப்பின் 17வது திருத்த சட்டத்தை முற்றிலும் அமுல் படுத்துவதோடு 18 வது திருத்த சட்டத்தை முற்றாக நீக்குவேன் என்றும் தெரிவித்தார். மேலும் தன்னை பொது வேட்பாளராக பிரேரித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை நேற்று பிற்பகல் முதலே மைத்திரிபாலவே பொது வேட்பாளர் என்று ஊகங்கள் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று அரசு தொடர்பாக ஊடகவியாலாளர் ஒருவரின் மரணவீட்டில் கலந்து கொண்ட மைத்திரி இதுவே தாம் அரசு சார்பாக இறுதியாக பங்கேற்பதாகவும் 5 வருடங்கள் சுகாதார அமைச்சராக சேவையாற்றிவிட்டதாகவும் இனி நாட்டுக்காக தன்னை அர்ப்பணிக்க போவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் இன்று காலை 10 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மைத்திரிபால சந்தித்ததை தொடர்ந்தே பிற்பகல் 2 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சி தலைமைப்பீடம் பொது வேட்பாளாராக மைத்திரிபாலவை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.