முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட அறுவருக்கு நாட்டுக்கு எதிரான சதிச்செயலில் ஈடுபட்டனர், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீற முற்பட்டமை தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளரான முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தாக்கல் செய்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மனுவின் அடிப்படையிலேயே பிரதம நீதியரசர் கே.சிறிபவன், நீதியரசர்களான பிரியசாத் டெப், ஈவா வனசுந்தர தலைமையிலான நீதியரசர்களடங்கிய குழுவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் இராணுவ படைகளை குவித்து குழப்ப நிலையை உருவாக்க முனைந்தார்,இது அரசியலமைப்பு சாசனத்தின் படி அடிப்படை உரிமை மீறல் செயற்பாடாகும் என்று கூறியே அம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.