வல்வெட்டித்துறை ஓ.ஆர்.ஜி இணையத்தில் சுமார் 16 வாரங்களாக ஆசிரியர் கி.செல்லத்துரை எழுதிய மனப்பட மனிதர்கள் என்ற தொடர் நூல் வடிவில் வெளிவருகிறது.
இந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 12.11.2016 சனிக்கிழமையன்று பி.ப. 3.00 மணியளவில் வல்வை யா.அ.மி.த.க பாடசாலை விழா மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
விழாவின் விருந்தினர்கள் பாடசாலை பான்ட்வாத்திய அணியினால் வரவேற்று மண்டபம் அழைத்துவரப்படுவார்கள்.
நிகழ்வின் தலைமை
கவிஞர் இ.த.ஜெயசீலன் - பிரதேச செயலர் பிரதேச செயலகம் பருத்தித்துறை
முதன்மை விருந்தினர்
கௌரவ ஆ. நடராஜன் இந்திய துணைத்தூதுவர் யாழ்ப்பாணம்.
பிரதம விருந்தினர்
கௌரவ சி.வி.கே சிவஞானம் அவைத்தலைவர் வடமாகாண சபை வடமாகாணம்.
சிறப்பு விருந்தினர்கள் :
திரு.எம்.கே.சிவாஜிலிங்கம்
( மாகாணசபை உறுப்பினர் வடமாகாணம் )
திரு.சு.சுகிர்தன்
( மாகாணசபை உறுப்பினர் வடமாகாணம் )
திரு. கே.சயந்தன்
( மாகாணசபை உறுப்பினர் வடமாகாணம் )
திரு. வே. சிவயோகம்
( மாகாணசபை உறுப்பினர் வடமாகாணம் )
திரு.சு.தர்மலிங்கம்
( மாகாணசபை உறுப்பினர் வடமாகாணம் )
திரு.இ.ஆர்நோல்ட்
( மாகாணசபை உறுப்பினர் வடமாகாணம் )
ஆகியோர் பங்கேற்க ஆரம்பமாகும் நிகழ்ச்சி நிரல் :
01. விருந்தினர் வரவேற்பு
02. மங்கள விளக்கேற்றல்
03. அகவணக்கம்
04. வரவேற்பு நடனம் : பாஸ்கரன் கோகிலா
05. வரவேற்புரை : தமிழ் பெண் விமானி. அர்ச்சனா செல்லத்துரை ( சிறப்பு காணொளி வழியாக )
06. வாழ்த்துரை : திரு. முத்துக்குமார் தங்கவேலு ( தங்கவேல் அண்ணா )
07. ஊரவர் உரை : திரு. ச.க.தேவசிகாமணி ( கட்டி அண்ணா )
08. சிறப்பு வாழ்த்துச் செய்தி : வஸந்த் செல்லத்துரை ( சிறப்பு காணொளி வழியாக )
09. சிறப்பு வாழ்த்துச் செய்தி : ரவிசங்கர் சுகதேவன் ( சிறப்பு காணொளி வழியாக )
10. நூல் முன் அறிமுக உரை : கவிஞர். கம்பிகளின் மொழி பிறேம்
11. நூல் வெளியீடு
12. சிறப்புப் பிரதி வழங்கல்
13. நூல் ஆய்வுரை : திரு. அப்பாத்துரை மாஸ்டர்
14. சிறப்பு விருந்தினர் உரை
15. பிரதம விருந்தினர் உரை
16. முதன்மை விருந்தினர் உரை
17. பரிசளிப்பு கௌரவம் அளித்தல்
18. ஏற்புடன் கூடிய நன்றியுரை : நூலாசிரியர்
நிகழ்ச்சித் தொகுப்பு : கவிஞர் யோ. புரட்சி
மண்டபத்தில் இருந்து இணையம் வழியாக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Nilakili Balamanoharan (Denmark)
Posted Date: November 08, 2016 at 21:44
வாழ்நாள் சாதனையாளர் கி. செல்லத்துரை அவர்களின் ‘மனப்பட மனிதர்கள’; என்ற நூல் நிச்சயமாக மனிதம் பற்றிப் பேசும். மனிதம் என்ற ஒன்றே மனிதகுலம் ‘ஒன்றுபட்டு வாழ்தல’; என்ற உன்னத நிலையை எட்ட உதவும் என நம்புபவன் நான்.
நூலாசிரியர் எல்லாத் தளங்;களிலுமே சமமான திறமையுடன் இறங்கிச் சிறப்பானவற்றை மட்டுமே வெளிக்கொணரும் ஆற்றல் கொண்டவர் என்பதை நான் அனுபவபூர்வமாக அறிவேன்.
மொத்தத்தில் ‘மனப்பட மனிதர்கள்’ என்ற நூல் ஒரு ஒளிவிளக்காகத் திகழும்! ஆறியாமை இருளை அகற்றும்! அவரை இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துவதில் மிகவும் பெருமை கொள்கிறேன்!
Nagulasigamany (Canada)
Posted Date: November 08, 2016 at 16:46
முத்தமிழ் வித்தகர் வல்வை கி.செல்லத்துரை மாஸ்டர் அவர்களின் ''மனப்பட மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா வல்வையில் சிறப்பாக நடைபெற வாழ்த் துவதோடு, வல்வை வரலாற்று ஆவணக்காப்பகமும் ( ''Images of Valvai") உங்களை வருக வருகவென வரவேற்கிறது. திரு.ந.நகுலசிகாமணி. திருமதி.நகுலசிகாமணி.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.