இலங்கையில் சமுத்திர பல்கலைக் கழகத்தில் 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் கல்வியாண்டில் தொழிற் கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். நீரியல் வளர்ப்பு மற்றும் நீரியல் வள முகாமைத்துவ டிப்ளோமா (NVQ-5). சுழியோடிகள் (NVQ-4). உயிர் பாதுகாப்பு (NVQ-4). வெளி இணைப்பு இயந்திர பொறிவலர் (NVQ-4). கடலக வரைபடம் வாசித்தாலும், செய்மதி தொடர்பாடலும் (GPS). கடலக மாலுமி (NVQ-4) ஆகிய பயிற்சி நெறிகளே ஆரம்பிக்கப்படவுள்ளன.
படகினை செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தினை (Cox Swains license) பெற்றுக் கொள்ளவிரும்புபவர்களுக்கு கடலக மாலுமி பயிற்சி நெறியானது மிகவும் பயனுள்ளதாக அமையும். மேற்படி பயிற்சி நெறிகளுக்கு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் தோற்றியவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் இக் கற்கை நெறிகளை பூர்த்தி செய்பவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தேசிய தொழிற்தகைமைச் (NVQ) சான்றிதழ் அனைத்து கற்கை நெறிகளும் கட்டணமின்றி நடாத்தப்படுவதுடன் இக் கற்கை நெறிகளை கற்க விரும்புபவர்கள் உரிய விண்ணப்பப் படிவங்களை 2ஆம் குறுக்கு வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியிலுள்ள இலங்கை சமுத்திர பல்கலைக் கழக அலுவலகத்தில் பெற்று 25.05.2018 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவும். மேலதிக தகவல்களை 021 7388188, 071 8349073, 077 3755063 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.