வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் பெருவிழாவான இந்திரவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. விழாவை முன்னிட்டு பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியின் ஊரணி முதல் ஊரிக்காடு வரையான சுமார் 3 கிலோமீட்டர் நீளமான பிரதான வீதி பல்வேறு சோடனைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பல இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்திரவிழாவைக் கண்டுகளிக்கவென யாழ் தீபகற்பம், தீவுப் பகுதிகள் மற்றும் இதர பகுதிகளில் இருந்து பெரும் திரளாக மக்கள் அணி வகுத்திருந்தனர். இதுவரை இடம்பெற்ற இந்திரவிழாவில் கலந்து கொண்டதைவிட இம்முறை இடம்பெற்ற விழாவிலே அதிகமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொள்ளவந்த மக்கள் எண்ணிக்கையை கணிப்பிடுவது சுலபமான பணியாக அமையாத போதிலும், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் வருகை தந்தனர் என பலரும் தெரிவித்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.