அதி தீவிர சூறாவளியாக மாறியுள்ள மிக்ஜாம் (Michaung) , சென்னையில் கடும் மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2023 (திங்கட்கிழமை)
சென்னைக்கு வட கிழக்காக சுமார் 200 கடல் மைல்கள் தொலைவில் மேற்கு - வட மேற்கு திசையில் நகரந்து வரும் சூறாவளியான மிக்ஜாம் (Michaung) அதி தீவிர சூறாவளியாக (Severe cyclonic storm, pronounced as Migjaum) மாறியுள்ளது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கடும் மழை பெய்து வருகின்றது.
மிக்ஜாம் சில மணி நேரங்களில் வடக்கு திசைநோக்கி, ஆந்திர கடற் பிரதேசத்துக்கு அண்மையாக, கரைக்கு சமாந்தரமாக நகவுள்ளது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.