அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் வல்வை விஜயம், ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் விளையாட்டுத்திடல் அமைப்பது உறுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2016 (சனிக்கிழமை)
இலங்கை வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 26ஆம் திகதி வல்வெட்டிதுறைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். வல்வையின் ரேவடி கடற்கரை மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், ரேவடி பகுதியில் கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் விளையாட்டுத் தொகுதியை அமைப்பதை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளார்.
ஆழிக்குமரன் ஆனந்தன்
இவை பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் பிரசுரமாகும்.
அமைச்சர் கடந்த வருடம் இப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு ரேவடி பகுதியில் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் விளையாட்டுத் திடல் அமைப்பது பற்றி தெரிவித்திருந்தது பற்றி நாம் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.