கடந்த 11 ஆம் திகதி அதிகாலை பருத்தித்துறை கடலில் மீன் பிடிக்கச் சென்ற பொலிகண்டியைச் சேர்ந்த 26 வயதுடைய அன்டன் ரஜீவன் என்னும் இளைஞர் காணாமல் போனதாக இவரின் உறவினர்களால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த மீனவர் நேற்று மீட்கப்பட்டுள்ளார். படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்திய மீனவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படியில் இந்திய கடலோர காவற்படையினரால் மீட்க்கப்பட்டு இலங்கை கடற்படையினர் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் இவர் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.