விஸ்தரிக்கப்பட்ட பனாமாக்கால்வாய் வழி பயணித்த முதலாவது கப்பல் MOL Benefactor - கப்டன் ஒரு இலங்கைத் தமிழர்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2016 (வியாழக்கிழமை)
'MOL Benefactor' ((Neopanamax Container ship) என்னும் 10,000 TEUS (10,000 எண்ணிக்கையான 20 அடி கொள்கலன்கள்) கொள்ளளவு உடைய, ஜப்பானின் பிரபல கப்பல் நிறுவனமான 'Mitsui O.S.K lines' னுடைய கொள்கலன் கப்பலே, விஸ்தரிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட பனாமாக் கால்வாய் (Expanded Panama Canal) வழி, முதலாவதாக வர்த்தக ரீதியான பயணத்தை மேற்கொண்ட கப்பல் ஆகும். இக்கப்பல் கடந்த 1 ஆம் திகதி முதலாவதாக தனது பயணத்தை மேற்கொண்டிருந்தது.
இந்தப் பயணத்திற்காக குறித்த கப்பல் நிறுவனம், பனாமாக் கால்வாய் அதிகாரசபைக்கு (Panama Canal Authority) 839,468/- அமெரிக்க டொலர்களைச் (சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலுத்தியுள்ளது என்பது ஊடகங்களில் மிகவும் பெரிதாகப் பேசப்பட்டுவருகின்றது.
வரத்தக ரீதியில் இது மிகவும் முக்கிய விடயம் ஆகையால், மேற்குறித்த செய்தி உலகளாவிய ரீதியில் (ஆங்கில) ஊடகங்களில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டுவருகின்றது.
இங்கு எம்மால் சுட்டிக்காட்டப்படக்கூடிய விடயம் யாதெனில், முதலாவதாக அகலப்படுத்தப்பட்ட பனாமாக் கால்வாய் வழி பயணித்த 'MOL Benefactor' கப்பலின் கப்டன், இலங்கைத் தமிழரான கப்டன் எம்.மங்களேஸ்வரன் (Capt.Mankkaleswaren) ஆவார் என்பது ஆகும்.
குறித்த தகவலை Company-of-Master-Mariners-of-Sri-Lankaபெருமையுடன் தமது உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளதுடன், மங்களேஸ்வரனுடைய கப்பல் நிறுவனமான MOL நிறுவனமும் ஒரு பிரத்தியேக செய்தி குறிப்பின் மூலம் குறித்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.