முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் சில இடங்களில் நேற்று வடக்கில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழில் "தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால்* நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தலில்,
*யாழ் நல்லூர் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் மாலை 6.30 மணியளவில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தனால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.*
இதேவேளை மே-18 நினைவேந்தல் வாரம் ஆரம்பம்; தமிழினப் படுகொலை ஆவணங்கள் நல்லூரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான தரவுகள் ஆவணமாக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழினப் படுகொலையை நினைவுகூரும் வகையில் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' நல்லூரில் நேற்று வழங்கப்பட்டது.
மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாவது நாள் நிகழ்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து நல்லூரில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அமைப்பின் யாழ். மாவட்ட உறவுகளால் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' காய்ச்சி வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.