கணபதி படிப்பகத்தின் 49 ஆவது ஆண்டுவிழாவும் பாலர் தினவிழாவும் நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2016 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 49வது ஆண்டு விழாவும் பாலர் தின விழாவும் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெற்றது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு. பூ.அகமணிதேவா் அவா்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு திரு.சந்திரசேகரம் பிரசாந் (செயலாளர், நகராட்சி மன்றம், வல்வெட்டித்துறை) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் நிகழ்வுகளின் வரிசையில் கணபதி பாலர் பாடசாலைப் பாலர்களின் கலைநிகழ்வுகளும், பழைய மாணவா்களின் கலைநிகழ்வுகளுடன் மின் நடனமும் நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.S.Thurai (Denmark)
Posted Date: August 16, 2016 at 19:12
சிறந்த முறையில் முன்னேறி வரும் கணபதி படிப்பக பாலர் பாடசாலைக்கு எனது மகத்தான வாழ்த்துக்கள்..!
பாலர் வகுப்பிலேயே குழந்தைகளுக்கு அவர்களுடைய உரிமை தொடர்பாக ஐ.நா சாசனத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கும் முறை வளர்ந்த நாடுகளில் உள்ளது.
பிள்ளைகளை பெறும் பெற்றோர் அவர்களை சீராக வளர்ப்பது கடமை, அதேவேளை அந்தப் பிள்ளைகள் தனி சுதந்திரமானவர்கள் அவர்களுக்கு சர்வதேசம் வழங்கியுள்ள உரிமைகளில் தலையிட பெற்றோருக்கு அதிகாரம் இல்லை என்ற வாசகங்கள் பாலர் பாடசாலைகளில் எழுதப்பட்டுள்ளன.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நிபுணர்கள் வழியாக சர்வதேச நியமங்களை விளங்கப்படுத்த வேண்டியது பாலர் பாடசாலைகளின் தலையாய கடமையாகும்.
கருத்தில் கொள்ளவும்..
எனது காலத்தில் வல்வையில் குழந்தைகள் உரிமை பேணப்படவில்லை என்பதை வெளிநாட்டில் ஆசிரியராக வந்த பின்னரே நான் கண்டு பிடித்தேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.