நேபாள் நிலநடுக்கத்தால் இலங்ககைக்கு பாதிப்பு இல்லை – அனர்த்த முகாமைத்துவ நிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2015 (சனிக்கிழமை)
இலங்கைக்கு வடக்காக அமைந்துள்ள நோபாளத்தில் இன்று காலை ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எதுவிதபாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலைய (Disaster Management Centre –DMC) பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கம் கடலில் அன்றி நிலத்திலேயே ஏற்பட்டுள்ளதால் இலங்கைக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 50 மைல் தொலைவில் 7.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வேதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.
சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் நீடித்ததாயும் இதனால் கட்டடங்கள் அதிர்ந்ததாயும் பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டுவெளியேறினர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.